/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தின உறுதிமொழி
/
குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தின உறுதிமொழி
ADDED : ஜூன் 13, 2025 01:20 AM
பென்னாகரம், தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் அடுத்துள்ள சின்னப்பள்ளத்துார் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நேற்று, குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தின உறுதிமொழி ஏற்கப்பட்டது. பள்ளி தலைமை ஆசிரியர் பழனி உறுதிமொழி வாசிக்க மாணவர்கள், ஆசிரியர்கள், மேலாண்மை குழு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் உறுதிமொழி ஏற்றனர்.
அப்போது, தலைமையாசிரியர் பழனி பேசுகையில், ''14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை ஒருபோதும் எந்தவித பணிகளிலிலும் ஈடுபடுத்தக்கூடாது. பள்ளிக்கு செல்லும்
வயதில் குழந்தைகளை ஊக்குவிக்க வேண்டும். குழந்தைகளின் எதிர்காலம் சிறக்க படிக்கும் வயதில் அனைத்துக் குழந்தைகளும் பள்ளிக்கு செல்வதை, நாம் உறுதி செய்ய வேண்டும். குழந்தை தொழிலாளர் இல்லாத மாநிலமாக மாற்ற நாம் முயற்சி செய்ய வேண்டும்,'' என்றார்.
நிகழ்ச்சியில், ஆசிரியர்கள் வளர்மதி,
பழனிசெல்வி, கல்பனா, திலகவதி, அனுப்பிரியா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.