/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
விபத்தில் சிவில் இன்ஜினியர் பலி
/
விபத்தில் சிவில் இன்ஜினியர் பலி
ADDED : மே 31, 2025 06:47 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓசூர்: அரியலுார் மாவட்டத்தை சேர்ந்தவர் பிரபாகரன், 32, சிவில் இன்ஜினியர்; கிருஷ்ணகிரி மாவட்டம், உத்தனப்பள்ளி அடுத்த லாலிக்கல் பகுதியில், தனியார் நிறுவன ஊழியர்களுக்கான குடியிருப்பு கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்தார்.
கடந்த, 27 இரவு, 8:30 மணிக்கு கெலமங்கலம் - ராயக்கோட்டை சாலையில் உள்ள கூத்தனப்பள்ளி பகுதியில் சென்ற போது, பைக்குடன் நிலைதடுமாறி கீழே விழுந்து தலையில் படுகாயமடைந்தார். அவரை மீட்ட அக்கம்பக்கத்தினர், ஓசூர் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரபாகரன், நேற்று முன்தினம் நள்ளிரவு உயிரிழந்தார். உத்தனப்பள்ளி போலீசார் விசாரிக்கின்றனர்.