/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
'பிரதமர் மோடியின் திட்டங்களை கூறி ஓட்டு சேகரியுங்கள்'
/
'பிரதமர் மோடியின் திட்டங்களை கூறி ஓட்டு சேகரியுங்கள்'
'பிரதமர் மோடியின் திட்டங்களை கூறி ஓட்டு சேகரியுங்கள்'
'பிரதமர் மோடியின் திட்டங்களை கூறி ஓட்டு சேகரியுங்கள்'
ADDED : ஜன 28, 2024 10:20 AM
கிருஷ்ணகிரி: ''பிரதமர் மோடியின் நலத்திட்டங்களை எடுத்துக்கூறி, தமிழக மக்களிடம் ஓட்டு கேட்க வேண்டும்,'' என, பா.ஜ., மாநில அமைப்பு செயலாளர் கேசவமூர்த்தி பேசினார்.
கிருஷ்ணகிரி லோக்சபா தொகுதி, பா.ஜ., அலுவலகம் திறப்பு விழா நேற்று நடந்தது. மாவட்ட தலைவர்கள் சிவலிங்கம், நாகராஜ் தலைமை வகித்தனர். மாநில செய்தி தொடர்பாளர் நரசிம்மன் முன்னிலை வகித்தார். தொடர்ந்து கிருஷ்ணகிரி, தர்மபுரி, வேலுார், திருவண்ணாமலை லோக்சபா தொகுதிக்கான பொறுப்பாளர்களின் கூட்டம் நடந்தது. இதில் பங்கேற்ற, பா.ஜ., மாநில அமைப்பு செயலாளர் கேசவமூர்த்தி பேசியதாவது:
லோக்சபா தேர்தல் பணிகள் குறித்து தலைமை வழங்கும் ஆலோசனைகளை பெற்று பணியாற்ற வேண்டும். கிராமங்கள்தோறும் பிரதமர் மோடியின் மத்திய அரசு வழங்கிய திட்டங்கள் சென்று சேர்ந்துள்ளது. அந்த மக்கள் நல திட்டங்கள் குறித்து, வீடு வீடாக சென்று பொது மக்களுக்கு எடுத்து கூற வேண்டும். இலவச காஸ் அடுப்பு, பிரதமர் வீடு, அனைவருக்கும் வங்கி கணக்கு, முத்ரா திட்டம், விவசாயிக்கு, 6,000 ரூபாய் போன்ற பல்வேறு திட்டங்களை எடுத்துக்கூறி, பா.ஜ., தொண்டர்கள் பணியாற்ற வேண்டும். தமிழகத்தில், பா.ஜ., நாளுக்கு நாள் வளர்ந்து வரும் கட்சியாக உள்ளது. மக்களின் எதிர்பார்ப்பு, நம் கட்சியை நோக்கி உள்ளது. மக்களின் நம்பிக்கையை, பா.ஜ., நிறைவேற்றும். கட்சி தலைமை அறிவிக்கும் வேட்பாளருக்கு ஆதரவாக தங்களின் கடமையை சிறப்பாக நிறைவேற்ற வேண்டும்.
இவ்வாறு, அவர் பேசினார்.
லோக்சபா தொகுதிகள் தொகுப்பு பொறுப்பாளர் வெங்கடேஷ், தேசிய பொதுக்கழு உறுப்பினர் பாலகிருஷ்ணகிரி, தர்மபுரி லோக்சபா தொகுதி பொறுப்பாளர் முனிராஜ் மற்றும் 4 லோக்சபா தொகுதி பொறுப்பாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

