/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
162 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கிய கலெக்டர்
/
162 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கிய கலெக்டர்
ADDED : ஜூலை 05, 2025 01:23 AM
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரியில் நடந்த, மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு தனியார் வேலைவாய்ப்பு முகாமில், 162 பேருக்கு பணி நியமன ஆணைகளை மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் வழங்கினார்.
கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்தில், மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் இணைந்து மாற்றுத்தினாளிகளுக்கான சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் நடத்தியது. கலெக்டர் தினேஷ் குமார் துவக்கி வைத்து, 162 மாற்றுத்திறனாளிகளுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கி பேசியதாவது:
மாற்றுத்திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு முகாமில், ஓசூர், கிருஷ்ணகிரியை சேர்ந்த பல்வேறு முன்னணி தனியார் துறை நிறுவனங்கள் பங்கேற்று, தங்கள் நிறுவனங்களுக்கு தேவையான ஆட்களை தேர்வு செய்தனர். இதில் கலந்து கொண்ட, 658 பேரில், 162 பேர் வேலைவாய்ப்பு பெற்றனர். 83 பேர் திறன் பயிற்சி பயில விருப்பம் தெரிவித்துள்ளனர். மேலும், 78 பேர் இரண்டாம் கட்ட தேர்விற்கு தகுதி பெற்றுள்ளனர்.
இவ்வாறு பேசினார்.
டி.ஆர்.ஓ., சாதனைக்குறள், துணை கலெக்டர் க்ரிதி காம்னா, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் கவுரி சங்கர், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் முருகேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.