ADDED : ஜூன் 15, 2025 01:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பேரிகை, கிருஷ்ணகிரி மாவட்டம், பேரிகை அருகே மிடுதேப்பள்ளியை சேர்ந்தவர் சிவப்பா மகள் ஸ்வர்ணா, 19. கர்நாடகா மாநிலம், மாலுார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், பி.எஸ்சி., முதலாமாண்டு படிக்கிறார்.
கடந்த, 11ம் தேதி காலை, 7:30 மணிக்கு, பேரிகை புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்து கல்லுாரிக்கு சென்ற மாணவி ஸ்வர்ணா திரும்பி வரவில்லை. அவரது தந்தை பேரிகை போலீசில் கொடுத்த புகாரில், எழுவப்பள்ளியை சேர்ந்த திருமல்லேஷ் என்பவர் மீது சந்தேகம் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.