/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
விவசாய பயிர்களை சேதப்படுத்திய யானைகள் வன அலுவலகம் முன் விவசாயிகள் போராட்டம்
/
விவசாய பயிர்களை சேதப்படுத்திய யானைகள் வன அலுவலகம் முன் விவசாயிகள் போராட்டம்
விவசாய பயிர்களை சேதப்படுத்திய யானைகள் வன அலுவலகம் முன் விவசாயிகள் போராட்டம்
விவசாய பயிர்களை சேதப்படுத்திய யானைகள் வன அலுவலகம் முன் விவசாயிகள் போராட்டம்
ADDED : ஜன 27, 2024 04:14 AM
தேன்கனிக்கோட்டை: தேன்கனிக்கோட்டை அருகே, விவசாய பயிர்களை யானைகள் சேதப்படுத்திய நிலையில், வனத்துறை அலுவலகம் முன் படுத்து, விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கர்நாடகா மாநிலம்,
பன்னார்கட்டா தேசிய பூங்காவில் இருந்து வெளியேறிய ஏராளமான யானைகள், கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை வனச்சரகத்தில் முகாமிட்டுள்ளன. இரவு நேரங்களில் வனத்தை விட்டு வெளியேறும் யானைகள், ராகி, தக்காளி, முட்டைகோஸ் போன்ற பல்வேறு விவசாய பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன.
தேன்கனிக்கோட்டை வனப்பகுதியில் இருந்து நேற்று முன்தினம் இரவு வெளியேறிய யானைகள், மாரச்சந்திரம் கிராமத்தை சேர்ந்த விவசாயி பைராஜ், 40, என்பவரது தோட்டத்திற்குள் புகுந்து, ஏராளமான மா செடிகள் மற்றும் ஆழ்துளை கிணறு பைப்புகளை சேதப்
படுத்தின.
அதேபோல், தடிக்கல் கிராமத்தை சேர்ந்த விவசாயி அனுமந்தன், 45, என்பவரது தோட்டத்திற்குள் புகுந்து, 50 க்கும் மேற்பட்ட மா மரங்கள் மற்றும் தண்ணீர் பைப்புகளை சேதப்படுத்தி விட்டு, மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றன.
இதனால் மனமுடைந்த விவசாயிகள் பைராஜ், அனுமந்தன் ஆகியோர், உரிய இழப்பீடு வழங்க வலியுறுத்தி, தேன்கனிக்கோட்டை வனத்துறை அலுவலகம் முன் நேற்று படுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை அழைத்து பேசிய வனத்துறையினர், உரிய இழப்பீடு வழங்குவதாக கூறியதை தொடர்ந்து அங்கிருந்து சென்றனர்.

