/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
பெரிய மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
/
பெரிய மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
ADDED : ஜூன் 14, 2025 06:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போச்சம்பள்ளி: கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த, சாதிநாய்க்கன்-பட்டி கிராமத்தில் வினாயகர், தேசத்து மாரியம்மன், நாகவள்ளி, பெரிய மாரியம்மன் உள்ளிட்ட கோவில்களில் கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது.
யாத்ரா தானம், திருக்குடம் புறப்பாடு, சக்தி கலசங்கள் ஆலயம் வலம் வருதல், பெரியமாரியம்மன், தேசத்து மாரியம்மன் விமான கோபுரம் மற்றும் மூலவர்களான பெரிய மாரியம்மன் தேசத்து மாரியம்மன், நாகவள்ளி, வினாயகர் பரிவார தேவதைகளுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து ராஜ அலங்காரத்தில் சுவா-மிகள் அருள் பாலித்தனர்.