/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கிராமசபை கூட்டத்தில் கூடுதலாக ஒகேனக்கல் குடிநீர் வழங்க தீர்மானம்
/
கிராமசபை கூட்டத்தில் கூடுதலாக ஒகேனக்கல் குடிநீர் வழங்க தீர்மானம்
கிராமசபை கூட்டத்தில் கூடுதலாக ஒகேனக்கல் குடிநீர் வழங்க தீர்மானம்
கிராமசபை கூட்டத்தில் கூடுதலாக ஒகேனக்கல் குடிநீர் வழங்க தீர்மானம்
ADDED : ஜன 27, 2024 04:12 AM
பாலக்கோடு: பாலக்கோடு அடுத்த பேளாரஹள்ளியில் நடந்த கிராமசபைக் கூட்டத்தில், கூடுதலாக ஒகேனக்கல் கூட்டு குடிநீர் வழங்க தீர்மானம் நிறைவேற்றினர்.
தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த பேளாரஹள்ளி பஞ்., தலைவர் ராதாமாரியப்பன் தலைமையில் கிராமசபைக் கூட்டம் நடந்தது. கோடை காலம் துவங்க உள்ள நிலையில் ஒகேனக்கல் குடிநீர் தட்டுப்பாடின்றி பொதுமக்களுக்கு வழங்க வேண்டும். மேலும், பற்றாக்குறையாக உள்ள இடங்களுக்கு கூடுதலாக குடிநீர் வழங்க வேண்டும். மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளை சுத்தம் செய்து, தண்ணீர் வினியோகம் செய்ய வேண்டும். மத்திய அரசின் ஜல்சக்தி திட்டத்தின் மூலம் சீரான குடிநீர் வழங்க வேண்டும். டெங்கு, மலேரியா, வைரஸ் காய்ச்சலை கட்டுப்படுத்த, கிராமங்கள் தோறும் மருத்துவ முகாம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
வார்டு கவுன்சிலர்கள், பஞ்., செயலாளர் முருகேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோல், மாவட்டம் முழுவதும் உள்ள பஞ்.,களில் குடியரசு தினத்தையொட்டி கிராமசபை கூட்டங்கள் நடத்தப்பட்டன.