/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
சப்ளம்மா தேவி கோவில் மாடுகள் திருவிழா துவக்கம்
/
சப்ளம்மா தேவி கோவில் மாடுகள் திருவிழா துவக்கம்
ADDED : பிப் 06, 2024 11:18 AM
ஓசூர்: ஓசூரில், சப்ளம்மா தேவி கோவில் மாடுகள் திருவிழா நேற்று துவங்கியது. இதில், 10 கோடி ரூபாய் வரை மாடுகள் விற்பனை நடக்கும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் கெலவரப்பள்ளி அணை அருகே, 200 ஆண்டு பழமையான திம்மசந்திரம் சப்ளம்மாதேவி கோவில் உள்ளது. இங்கு, நாட்டு மாடுகளை அழிவில் இருந்து பாதுகாக்க, ஆண்டுதோறும் மாடுகள் திருவிழா நடக்கிறது. இந்தாண்டு திருவிழா நேற்று துவங்கியது. கோவில் கமிட்டி தலைவர் கஜேந்திரமூர்த்தி, துணைத்தலைவர் தியாகராஜன் மற்றும் நிர்வாகிகள் முன்னிலையில், மாடுகளுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வரும், 11 ல் இரவு, 9:00 மணிக்கு, 61 பல்லக்கு உற்சவம் மற்றும் குருட்சேத்திரம் நாடகம், வாணவேடிக்கை நடக்கிறது.
திருவிழாவிற்கு, தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, தெலுங்கானா, கேரளா, கர்நாடகாவில் இருந்தும் அதிகளவு வியாபாரிகள், விவசாயிகள் வருவார்கள் என்பதால் இந்தாண்டு, 10 கோடி ரூபாய் அளவிற்கு மாடுகள் விற்பனை நடக்க வாய்ப்புள்ளதாகவும், 100 ஜோடி மாடுகள் விற்பனைக்கு வரும் என்றும், விழா குழுவினர் தெரிவித்தனர். சப்ளம்மா தேவி கோவில் கமிட்டி நிர்வாகிகள் ராஜாரெட்டி, சிவானந்தன், கிருஷ்ணப்பா உட்பட பலர் பங்கேற்றனர்.