sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

சர்வதேச யோகா தின கொண்டாட்டம்

/

சர்வதேச யோகா தின கொண்டாட்டம்

சர்வதேச யோகா தின கொண்டாட்டம்

சர்வதேச யோகா தின கொண்டாட்டம்


ADDED : ஜூன் 22, 2025 01:01 AM

Google News

ADDED : ஜூன் 22, 2025 01:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி, உடல் ரீதியாகவும் மன

ரீதியாகவும் யோகாவின் நன்மைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், ஐ.நா., சபை, கடந்த, 2014ல், ஜூன், 21ம் தேதியை சர்வதேச யோகா தினமாக அறிவித்தது.

அதன்படி நேற்று, கிருஷ்ணகிரி மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது. மாவட்ட முதன்மை நீதிபதி லதா தலைமை வகித்தார்.

கிருஷ்ணகிரி மனவளக்கலை மன்ற அறக்கட்டளை சார்பில் உடற்பயிற்சி மற்றும் யோகாவின் முக்கியத்துவம் குறித்தும், அதற்கான விளக்கத்தையும் செல்வி விஷ்வபிரியா கூற, வழக்கறிஞர் இளங்கோவன் அறங்காவலர்கள் சுதர்சன், வேதகிரி மற்றும் லோகநாதன் ஆகியோர் செய்தனர்.

கூடுதல் மாவட்ட நீதிபதி தாமோதரன் சிறப்பு மாவட்ட நீதிபதி அமுதா விரைவு மகளிர் நீதிமன்ற நீதிபதி சுதா தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் கோகுலகிருஷ்ணன் முதன்மை சார்பு நீதிபதி ஜெனிபர்,

அறக்கட்டளை தலைவர் சண்முகம், பொருளாளர் பாலதண்டாயுதம், பொறுப்பாசிரியர் மகாலிங்கம், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

* ஓசூர், காமராஜ் காலனி கே.ஏ.பி., திருமண மண்டபத்தில், பதஞ்சலி யோகா சமிதி சார்பில், 11ம் ஆண்டு சர்வதேச யோகா தினத்தையொட்டி, நேற்று காலை யோகா நிகழ்ச்சி நடந்தது.

பதஞ்சலி யோகா சமிதி மாநில தலைவர் பாரஸ்மல் தலைமையில், மாநகராட்சி மண்டல தலைவர் ஜெயப்பிரகாஷ், வக்கீல் ராம்பிரசாத், மாணவ,

மாணவியர் உட்பட பொதுமக்கள் பலர் யோகாசனம்

செய்தனர்.

தேன்கனிக்கோட்டை அருகே, வாத்சல்யம் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் கவுதமன் தலைமையில், மாணவ, மாணவியர் மற்றும் பொதுமக்கள் யோகாசனம் செய்தனர்.

கெலமங்கலம் அருகே ஓன்னுகுறுக்கி நாக முனீஸ்வரர் கோவில் வளாகத்தில், பா.ஜ., கெலமங்கலம் மேற்கு ஒன்றிய தலைவர் ராஜேஷ்குமார் தலைமையில், ஏராளமானோர் யோகாசனம் செய்தனர்.

* ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில், சர்வதேச யோகா தினம் தலைமை மருத்துவ அலுவலர் எழிலரசி தலைமையில் நடந்தது. யோகா தினம், யோகா செய்வதால் ஏற்படும்

நன்மைகள் குறித்தும் அவர் பேசினார்.

டாக்டர்கள் இளவரசன், சுபாஷினி, பிரபா, பாரதிராஜா, சித்தா டாக்டர் கமலநாதன், மருந்தாளுனர் சேகர், செவிலியர்

கண்காணிப்பாளர் விஜயா, செவிலியர்கள் சித்ரா, அலமேலு, சாமுண்டீஸ்வரி உட்பட பலர் யோகா பயிற்சி

செய்தனர்.






      Dinamalar
      Follow us