/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
15 ஆண்டுக்கு ஒரு முறை நடக்கும் கீரம்மா அம்மன் கோவில் திருவிழா
/
15 ஆண்டுக்கு ஒரு முறை நடக்கும் கீரம்மா அம்மன் கோவில் திருவிழா
15 ஆண்டுக்கு ஒரு முறை நடக்கும் கீரம்மா அம்மன் கோவில் திருவிழா
15 ஆண்டுக்கு ஒரு முறை நடக்கும் கீரம்மா அம்மன் கோவில் திருவிழா
ADDED : ஜூன் 20, 2025 01:25 AM
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஹள்ளி அடுத்த அரியனப்பள்ளி கிராமத்தில், கீரம்மா அம்மன் கோவிலில், 15 ஆண்டுகளுக்கு ஒரு முறை திருவிழா நடப்பது வழக்கம். அதன்படி, நேற்று அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை, பூஜை நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் அம்மன் அருள் பாலித்தார். இதில், தமிழக, ஆந்திரா மாநில எல்லையிலுள்ள, 14 கிராமங்கள் இணைந்து, மா விளக்கை ஊர்வலமாக கொண்டு வந்தனர். தொடர்ந்து அம்மனுக்கு, 5,000க்கும் மேற்பட்ட ஆடு, கோழிகளை பலியிட்டு, வேண்டுதலை நிறைவேற்றினர். மேலும் உறவினர்களுக்கு, விருந்து சமைத்து வழங்கினர். இதில், இம்மாவட்டம் மட்டுமின்றி, ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
கிடா விருந்தால் அரியனப்பள்ளி சாலையிலுள்ள டாஸ்மாக் கடைகளில் மதுப்பிரியர்கள் குவிந்தனர். இதனால் வேப்பனஹள்ளி நகரில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பகல், 12:00 மணி முதல் மதியம், 2:00 மணி வரை, 2 கி.மீ., தொலைவிற்கு ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலில் சிக்கி, வாகன ஓட்டிகள் சிரமத்திற்குள்ளாகினர். போக்குவரத்தை சரிசெய்ய, 100க்கும் மேற்பட்ட போலீசார் மிகவும் போராடினர்.