/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
சாலையோர கடைகளில் மாம்பழ விற்பனை ஜோர்
/
சாலையோர கடைகளில் மாம்பழ விற்பனை ஜோர்
ADDED : ஜூன் 26, 2025 01:20 AM
கிருஷ்ணகிரி, காவேரிப்பட்டணத்தில் இருந்து சப்பாணிப்பட்டி வரையிலான சாலையோர கடைகளில் மாம்பழம் விற்பனை ஜோராக நடந்து வருகிறது.
கிருஷ்ணகிரி - தர்மபுரி தேசிய நெடுஞ்சாலையில், காவேரிப்பட்டணத்தில் இருந்து சப்பாணிப்பட்டி வரை சாலையோரம் மாம்பழம் விற்பனை செய்ய, 30க்கும் மேற்பட்ட கடைகளை வைத்துள்ளனர். கடந்த, 25 நாட்களாக இயங்கி வரும் இக்கடைகள் அடுத்த மாதம் இறுதி வரை, மாம்பழ விற்பனைக்கு திறந்து வைக்கப்பட்டிருக்கும். மாவட்டத்தில் பல்வேறு ரக மாம்பழங்கள் சாகுபடி செய்யப்பட்டாலும், இங்கு குறிப்பிட்ட சில ரகங்களை மட்டும் விற்பனைக்கு வைத்துள்ளனர்.
அதில், சேலம் மல்கோவா ஒரு கிலோ, 120 முதல், 150 ரூபாய் வரையும், நாட்டி மல்கோவா, 100 முதல், 120 ரூபாய் வரையும், செந்துாரா, 40 முதல், 50 ரூபாய், நடுசாலை, 90 ரூபாய்க்கும் விற்பனை செய்கின்றனர். கார்களில் செல்வோர் இங்கு சென்று மாம்பழங்களை ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர். இந்தாண்டு மாவட்டத்தில், 'மா' விளைச்சல் அதிகரித்திருந்தாலும், பெங்களூரா மாங்காய் மட்டுமே விலை குறைந்துள்ளது. மற்ற ரக மாங்காய்கள் கடந்த ஆண்டை போல, நல்ல விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.