/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ஒவ்வொரு கூட்டத்திற்கும் ஒரு கமிஷனர்
/
ஒவ்வொரு கூட்டத்திற்கும் ஒரு கமிஷனர்
ADDED : ஜூலை 05, 2025 01:23 AM
ஓசூர் மாநகராட்சியில், கடந்த ஜனவரியில் நடந்த கூட்டத்தில் கமிஷனர் ஸ்ரீகாந்த் பங்கேற்றார். அவர் இடமாற்றம் செய்யப்பட்ட நிலையில், பிப்ரவரியில் பொறுப்பு கமிஷனராக நியமிக்கப்பட்ட பூங்கொடி அருமைக்கண், பட்ஜெட் தாக்கல் செய்தார். அவர் மாற்றப்பட்டு, பொறுப்பு கமிஷனராக நியமிக்கப்பட்ட மாரிச்செல்வி, கடந்த இரு மாதத்திற்கு முன் நடந்த கூட்டத்தில் பங்கேற்றார்.
தற்போது புதிய கமிஷனராக பொறுப்பேற்றுள்ள ஷபீர் ஆலம், நேற்று நடந்த கூட்டத்தில் பங்கேற்றார். கடந்த, 7 மாதத்தில் நடந்த நான்கு கூட்டத்திற்கு, நான்கு பேர் கமிஷனராக இருந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பேட்ஜ் அணிந்து வந்த அ.தி.மு.க.,வினர்
சிவகங்கை மாவட்டம், மடப்புரம் பத்திரகாளியம்மன் கோவில் காவலாளி அஜித்குமார் கொலை சம்பவத்தில் நீதி கேட்டும், தமிழக அரசை கண்டித்தும், மாநகராட்சி கூட்டத்திற்கு நேற்று வந்த, 11க்கும் மேற்பட்ட அ.தி.மு.க., கவுன்சிலர்கள், அஜித்குமார் படத்துடன் கூடிய பேட்ஜ் அணிந்து பங்கேற்றனர்.