/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
மருதேரியில் உடைந்த குடிநீர் குழாய்கள் சீரமைப்பு
/
மருதேரியில் உடைந்த குடிநீர் குழாய்கள் சீரமைப்பு
ADDED : ஜூன் 22, 2024 12:38 AM
கிருஷ்ணகிரி: மருதேரி, தென்பெண்ணையாற்றியில் இருந்து கிராமங்களுக்கு செல்லும் உடைந்த குடிநீர் குழாய்கள் சீரமைக்கப்பட்டன.கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த மருதேரி தென்பெண்ணை ஆற்றில், உறை கிணறுகள் அமைக்கப்பட்டு சுற்றுவட்டார கிராமங்களுக்கு தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது.
இந்நிலையில், அகரம் கிராமத்திற்கு செல்லும் உறை கிணற்றில் அமைக்கப்பட்டுள்ள குழாயில் உடைப்பு ஏற்பட்டு, அகரம் பகுதி மக்கள் குடிநீர் கிடைக்காமல் அவதியடைந்த செய்தி நமது நாளிதழில் படத்துடன் வெளியானது. இந்நிலையில், மருதேரி தென்பெண்ணையாற்றில் இருந்து அகரம் செல்லும் குடிநீர் குழாய்கள் சீரமைக்கப்பட்டு, புதிய குழாய்கள் அமைக்கப்பட்டு குடிநீர் வினியோகம் சீரமைக்கப்பட்டது.