/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
தண்ணீரும் இல்லை; கழிவறையும் சரியில்லை பூங்காவிற்கு செல்பவர்களுக்கு தொற்று நோய் அபாயம்

ADDED : ஜூன் 21, 2025 12:54 AM
ஓசூர், ஓசூர் சிறுவர் பூங்காவிற்கு செல்லும் மக்கள் பயன்படுத்தும் கழிவறைகள் தண்ணீரின்றியும், போதிய பராமரிப்பின்றியும் உள்ளதால், தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மாநகராட்சி பகுதியில் வசிக்கும் மக்களுக்கு பொழுதுபோக்கு இடமாக, ராமநாயக்கன் ஏரிக்கரையில் உள்ள நடைபயிற்சி மற்றும் சிறுவர் பூங்கா மட்டுமே உள்ளது. இங்கு தினமும் காலை, மாலை நேரங்களில் நடைபயிற்சி செல்வதற்காக ஆண்கள், பெண்கள் என நுாற்றுக்கணக்கானோர் வருகின்றனர். அதுமட்டுமின்றி, அங்குள்ள பூங்காவில் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் விளையாட்டு உபகரணங்கள் அமைக்கப்பட்டுள்ளதால், பெற்றோருடன் சிறுவர், சிறுமியர் ஆர்வமுடன் விளையாட வருகின்றனர்.
ஆனால், விளையாட்டு உபகரணங்கள் பராமரிப்பின்றி மோசமாக உள்ளன. செடி, கொடிகள் ஆக்கிரமித்துள்ளதால், கொசுத்தொல்லை அதிகமாக உள்ளது. அதனால், மக்கள் கடும் சிரமப்படுகின்றனர். இதுமட்டுமின்றி, பூங்காவிற்கு வரும் ஆண்கள், பெண்களுக்கு தனித்தனியாக கழிவறை வசதி செய்யப்பட்டுள்ளது. இங்கு தண்ணீர் இல்லாததால், சுகாதாரமற்ற நிலையில் இயற்கை உபாதைகள் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. கழிவறைக்குள் சென்று வந்தாலே, தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது.
மாநகராட்சி நிர்வாகத்தின் அலட்சியத்தால், மக்களுக்கு இருக்கும் ஒரே ஒரு பொழுதுபோக்கு இடத்தை கூட பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் கூறுகின்றனர்.