/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
நெல்லுக்கு பிந்தைய பயிர் சாகுபடி விவசாயிகளுக்கு பயிற்சி வகுப்பு
/
நெல்லுக்கு பிந்தைய பயிர் சாகுபடி விவசாயிகளுக்கு பயிற்சி வகுப்பு
நெல்லுக்கு பிந்தைய பயிர் சாகுபடி விவசாயிகளுக்கு பயிற்சி வகுப்பு
நெல்லுக்கு பிந்தைய பயிர் சாகுபடி விவசாயிகளுக்கு பயிற்சி வகுப்பு
ADDED : ஜன 17, 2024 11:40 AM
ஊத்தங்கரை: பெரியதள்ளப்பாடி கிராமத்தில், ஊத்தங்கரை வட்டார வேளாண் துறை, அட்மா திட்டத்தில், விவசாயிகளுக்கு நெல்லுக்கு பிந்தைய பயிர் சாகுபடி குறித்து பயிற்சி நடந்தது. வட்டார வேளாண் உதவி இயக்குனர் முனைவர் கருப்பையா தலைமை வகித்து, நெல்லுக்கு பிறகு பயறு வகைகள் மற்றும் சிறுதானியங்கள் சாகுபடி செய்வதன் தொழில்நுட்பங்கள் குறித்தும், விதை நேர்த்தி செய்வதற்கு உயிர் உரங்கள் பயன்படுத்துவது குறித்தும், விவசாயிகளுக்கு அறிவுரை வழங்கினார். இப்பயிற்சியில், ஆதிபராசக்தி வேளாண் கல்லுாரி இணை ஆராய்ச்சியாளர் மனோபாரதி, நெல்லுக்கு பின் பயறு வகை பயிர்களான காராமணி, உளுந்து, பச்சைபயறு போன்ற பயிர்களை சாகுபடி செய்து, மகசூல் அதிகமாக கிடைப்பதன் தொழில்நுட்பம் குறித்து விளக்கினார்.
ஆதிபராசக்தி வேளாண் கல்லுாரி துணை ஆராய்ச்சியாளர் தீனதயாளன், சொட்டுநீர் பாசனம் அமைத்து, உயிர் உரங்களை இடுவது குறித்து விளக்கினார். வட்டார தொழில்நுட்ப மேலாளர் சதீஷ்குமார், மீன் அமினோ அமிலம் செய்வதற்கு தேவையான பொருட்கள் பயன்படுத்தும் தொழில்நுட்பம் போன்றவைகளை செயல்விளக்கம் செய்து காண்பித்தார்.
உதவி தொழில்நுட்ப மேலாளர் சாரதி இப்பயிற்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தார். பயிற்சியில் சிறுதானிய தொழில்நுட்ப கையேடுகளை, விவசாயிகளுக்கு வேளாண் உதவி இயக்குனர் வழங்கினார்.

