ADDED : ஜன 27, 2024 04:12 AM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில், கிழக்கு மாவட்ட தி.மு.க., மாணவர் அணி சார்பில், மொழிப்போர் தியாகிகளுக்கு வீர வணக்க நாள் பொதுக்கூட்டம் நடந்தது. மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் ஜெயேந்திரன் தலைமை வகித்தார். நகர செயலாளர் நவாப் வரவேற்றார். கிழக்கு மாவட்ட தி.மு.க., செயலாளர் மதியழகன் எம்.எல்.ஏ., மற்றும் தலைமை கழக பேச்சாளர்கள் பொன்னேரி சிவா, விஷார் தமிழரசன் ஆகியோர் பேசினர்.
நிகழ்ச்சியில், மொழிப்போர் தியாகிகளான முன்னாள் எம்.எல்.ஏ., கோவிந்தசாமி, தனபால் ஆகியோர் கவுரவிக்கப்பட்டனர். முன்னாள் மாவட்ட செயலாளர் செங்குட்டுவன், மாவட்ட அவைத் தலைவர் தட்ரஅள்ளி நாகராஜ், ஊராட்சிக்குழு தலைவர் மணி மேகலை நாகராஜ், மாவட்ட துணை செயலாளர்கள் கோவிந்தசாமி, சந்திரன், சாவித்திரி கடலரசுமூர்த்தி, நகர்மன்ற தலைவர் பரிதா நவாப்,
அன்பரசன் உள்பட பலர் பங்கேற்றனர்.

