/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ரூ.1.97 லட்சத்தில் நலத்திட்ட உதவி
/
ரூ.1.97 லட்சத்தில் நலத்திட்ட உதவி
ADDED : ஜூன் 11, 2025 01:46 AM
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் முன்னாள் படைவீரர்கள் நலத்துறை சார்பில் முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களை சார்ந்தவர்களுக்கான சிறப்பு குறைதீர் நாள் கூட்டம் கலெக்டர் தினேஷ்குமார் தலைமையில் நேற்று நடந்தது-.
கூட்டத்தில், கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் படைவீரர்கள், அவர்களின் குடும்பத்தை சேர்ந்த, 24 பேர் தங்கள் கோரிக்கைகளை கலெக்டரிடம் மனுக்களாக கொடுத்தனர். தொடர்ந்து முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களை சார்ந்தவர்களின் நலனுக்காக புற்றுநோய், பக்கவாதம், தொழுநோய், காசநோய், கண்பார்வையற்றோர் மற்றும் குள்ளத்தன்மை போன்ற மருத்துவ குறைபாடு உடையவர்களுக்கு நடந்த மருத்துவ பரிசோதனை முகாமை, கலெக்டர் பார்வையிட்டார். தொடர்ந்து, முன்னாள் படைவீரர்கள் நல தொகுப்பு நிதியிலிருந், மருத்துவ உதவித்தொகை, ஊக்கத்தொகை உள்பட, 10 பேருக்கு, 1.97 லட்சம் ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
கூடுதல் கலெக்டர் (பயிற்சி) க்ரிதி காம்னா, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் கவுரிசங்கர், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் முருகேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.