ADDED : மே 27, 2025 01:59 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓசூர், ஓசூர், கொத்துார் ஏரியில், 55 வயது மதிக்கத்தக்க பெண் சடலம் அழுகிய நிலையில் மிதப்பதாக, மூக்கண்டப்பள்ளி வி.ஏ.ஓ., மகேஸ்வரி, ஓசூர் டவுன் போலீசில் புகார் செய்தார்.
போலீசார் சடலத்தை மீட்டு விசாரித்த நிலையில், இறந்த பெண் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என்ற விபரம் தெரியவில்லை. அப்பெண் சேலை அணிந்துள்ளார். இரு கைகளிலும் பூ பச்சை குத்தப்பட்டுள்ளது. ஏரியில் தவறி விழுந்து பெண் பலியானாரா அல்லது வேறு ஏதாவது காரணமா என, போலீசார் விசாரித்து வருகின்றனர்.