நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருமங்கலம் : திருமங்கலம் அருகே வாகைகுளம் தோட்டத்து வீட்டை சேர்ந்த பிச்சை மணி மனைவி சிவகனி 36, நேற்று அருகில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று விட்டு மாலை 4:00 மணிக்கு வீட்டிற்கு வந்தார்.
வீட்டின் கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 5 பவுன் தங்க நகைகள், வெள்ளி கொலுசுகள், பணம் ரூ. 2800 திருடு போனது தெரிந்தது. சிந்துபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.