/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
கடமலைக்குண்டு அருகே 22 கி., கஞ்சா பறிமுதல் 3 பேர் கைது
/
கடமலைக்குண்டு அருகே 22 கி., கஞ்சா பறிமுதல் 3 பேர் கைது
கடமலைக்குண்டு அருகே 22 கி., கஞ்சா பறிமுதல் 3 பேர் கைது
கடமலைக்குண்டு அருகே 22 கி., கஞ்சா பறிமுதல் 3 பேர் கைது
ADDED : ஜூன் 29, 2024 04:37 AM
கடமலைக்குண்டு, : தேனி மாவட்டம் கடமலைக்குண்டு அருகே கஞ்சா கடத்திய 3 பேரை போலீசார் கைது செய்தனர். 22 கிலோ எடையுள்ள கஞ்சா பண்டல்களையும் பறிமுதல் செய்தனர்.
கடமலைக்குண்டு அருகே குமணன்தொழு தளிப்பாறையைச் சேர்ந்தவர் சத்யராஜ் 31, இவர் மீது மதுரை, திண்டுக்கல், கடமலைக்குண்டு போலீஸ் ஸ்டேஷன்களில் பல்வேறு கஞ்சா வழக்குகள் உள்ளன. தலைமறைவான சத்யராஜை போலீசார் அவரின் அலைபேசி எண் மூலம் கண்காணித்து வந்தனர்.
சத்யராஜ் மற்றும் கூட்டாளிகள் கடமலைக்குண்டு பகுதிக்கு பஸ்சில் வருவதாக போலீசாருக்கு தகவல் சென்றது. போலீசார் தேவராஜ் நகரில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். பஸ்சில் சென்ற சத்யராஜ் மற்றும் உசிலம்பட்டி அருகே நக்கலபட்டியைச் சேர்ந்த மாயன் 55, கீரிப்பட்டியைச் சேர்ந்த வனராஜா 48, ஆகியோரை பிடித்தனர். அவர்களது சாக்குப்பையை சோதனை செய்ததில் 22 கிலோ எடையுள்ள 5 கஞ்சா பண்டல்களை மறைத்து வைத்திருந்தனர். 3 பேரையும் கைது செய்து போலீசார் விசாரித்தனர்.
விசாரணையில் மாயன், வனராஜா ஆகியோர் மீது கோவை, திருப்பூர், உசிலம்பட்டி போலீஸ் ஸ்டேஷன்களில் கஞ்சா வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரிய வந்தது. மூவரும் விசாரணைக்கு பின்பு கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டு தேக்கம்பட்டியில் உள்ள தேனி மாவட்ட ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.