ADDED : ஜூலை 25, 2024 04:55 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருமங்கலம்: திருமங்கலம் கப்பலுார் சிட்கோ தொழிற்பேட்டையில் கொரியர் நிறுவனத்தில் மின் கசிவு காரணமாக ஏற்பட்ட தீ விபத்தில் பொருட்கள் எரிந்தன.
சிட்கோ தொழிற்பேட்டையில் சேப் எக்ஸ்பிரஸ் கொரியர் நிறுவனம் உள்ளது. இங்கு நேற்று எலெக்ட்ரிகல் வயரிங் வேலைகள் நடந்தன. இரவு 8:30 மணிக்கு மின் கசிவு காரணமாக பொருள்களில் தீ பிடித்தது. தொழிலாளர்கள் தீயை அணைக்க முயற்சித்தனர். ஆனால் தீ மளமளவென பரவியது. தொழிலாளர்கள் விரைவாக வெளியேறினர்.
பொருட்களை ஏற்றி இறக்குவதற்காக வந்திருந்த 8க்கும் மேற்பட்ட லாரிகள், 25க்கும் மேற்பட்ட மினி வேன்களை வெளியேற்றினர். ஒரு லாரியின் முன் பகுதி மட்டும் எரிந்து சேதமடைந்தது.
தீயணைப்பு படையினர் தீயை போராடி அணைத்தனர்.