/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
கப்பலுார் டோல்கேட்டை அகற்ற நாளை 'பந்த்'; தி.மு.க.,, அ.தி.மு.க., ஆதரவு
/
கப்பலுார் டோல்கேட்டை அகற்ற நாளை 'பந்த்'; தி.மு.க.,, அ.தி.மு.க., ஆதரவு
கப்பலுார் டோல்கேட்டை அகற்ற நாளை 'பந்த்'; தி.மு.க.,, அ.தி.மு.க., ஆதரவு
கப்பலுார் டோல்கேட்டை அகற்ற நாளை 'பந்த்'; தி.மு.க.,, அ.தி.மு.க., ஆதரவு
ADDED : ஜூலை 29, 2024 06:46 AM
திருமங்கலம் : கப்பலுார் டோல்கேட்டை அகற்ற வலியுறுத்தி திருமங்கலத்தில் நாளை (ஜூலை 29) 'பந்த்' நடக்க உள்ளது.
இப்போராட்டத்திற்கு ஆதரவு கேட்டு கப்பலுார் டோல்கேட் எதிர்ப்பு ஒருங்கிணைப்பு குழுவினர் நேற்று திருமங்கலத்தில் மதுரை தி.மு.க., தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறனை சந்தித்தனர்.
ஒருங்கிணைப்பு குழுவினர் கூறியதாவது: 12 ஆண்டுகளுக்கு மேலாக திருமங்கலம் பகுதியினருக்க தொல்லையாக இந்த டோல்கேட் அமைந்துள்ளது. தற்போது நிர்வகிக்கும் நிறுவனம் 32 ஆண்டுகளுக்கு டோல்கேட்டை நிர்வாகம் செய்ய உள்ளது. இதனால் வருங்கால சந்ததியினரும் பாதிக்கப்படுவர்.
இந்த டோல்கேட் மேலக்கோட்டை விலக்கில் அமைய வேண்டும். கொல்லம் ரோட்டில் செல்லும் வாகனங்களிடமும் வசூலிக்கும் நோக்கில் கப்பலுாரில் அமைத்துள்ளனர். உச்சநீதிமன்றத்தில் திருமங்கலம் பகுதியினருக்கு மாற்று சாலையாக திருமங்கலம் விமானநிலைய சாலையை டோல்கேட் மற்றும் தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் காட்டியுள்ளது. சர்வீஸ் ரோட்டையும் டோல்கேட் ரோடாக மாற்றிவிட்டனர். இதனை அகற்றவேண்டும் என்றனர்.
அவர்களிடம் பேசிய மணிமாறன், ''கப்பலுார் டோல்கேட் பிரச்னையில் தி.மு.க.,வும் ஆரம்பமுதலே உங்களுடன் இணைந்து போராடியுள்ளது. சில தினங்களுக்கு முன்பு மதுரையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் மூர்த்தி டோல்கேட் பிரச்னை குறித்து பேசியுள்ளார். விரைவில் இது சம்பந்தமாக முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்திக்க ஏற்பாடு செய்கிறோம். அவரிடம் ஆலோசனை பெற்று அகற்ற நடவடிக்கை எடுப்போம். ஆளுங்கட்சியாக இருப்பதால் மக்களை பாதிக்காத வகையில் நடைபெறும் அனைத்து போராட்டங்களிலும் தி.மு.க., கலந்து கொள்ளும் என்றார். திருமங்கலம் நகர தி.மு.க., செயலாளர் ஸ்ரீதர், நகராட்சி தலைவர் ரம்யா, கள்ளிக்குடி ஒன்றிய செயலாளர் மதன்குமார் கலந்து கொண்டனர்.
அ.தி.மு.க.,வும் ஆதரவு
சிவரக்கோட்டையில் மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கள்ளிக்குடி ஒன்றிய ஜெ., பேரவை சார்பில் விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழக்கும் நிகழ்ச்சி நடந்தது.
இதில் முன்னாள் அமைச்சர் உதயகுமார் பேசியதாவது:
டோல்கேட் விவகாரத்தில் 28 சங்கங்களை சேர்ந்தவர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து அழைப்பு விடுத்தனர். மக்கள் கோரிக்கைகளை அரசுக்கு கொண்டு செல்லும் எந்த போராட்டத்திலும் அ.தி.மு.க.,வும் பங்கேற்கும்
ஸ்டாலின் தேர்தல் பிரசாரத்தின் போது, 'ஆட்சிக்கு வந்தால் மூன்று மாதத்தில் தீர்வு காண்பேன்' என்றார். மூன்றாண்டுகளாகியும் மனு வாங்கக் கூட அவர் தயாராக இல்லை என்றார்.