தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ பக்தர்களுக்கு வசதிகள் தேவை

பக்தர்களுக்கு வசதிகள் தேவை

பக்தர்களுக்கு வசதிகள் தேவை


ADDED : செப் 18, 2024 04:54 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 18, 2024 04:54 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: புரட்டாசி சனிக்கிழமைகளில் தமிழகத்தில் உள்ள அனைத்து வைணவ கோயில்களுக்கும் பக்தர்கள் கூடுதலாக வருவதால் அவர்களுக்கு வசதிகள் ஏற்படுத்தித்தர ஹிந்து ஆலயப் பாதுகாப்பு இயக்கம் வலியுறுத்தியுள்ளது.

தற்போது வெயிலின் தாக்கம் அதிகம் இருப்பதால் கோயிலில் பக்தர்கள் நீண்ட நேரம் வரிசையில் நிற்கின்றனர். பக்தர்களை வெயிலில் இருந்து பாதுகாக்க கொட்டகை அமைத்து, குடிநீர் வசதி, காலணிகள் பாதுகாப்புக்கு போதிய பணியாளர்களை நியமிக்க வேண்டும். போலீஸ் பாதுகாப்புடன், தற்காலிக கழிவறை வசதியையும் ஏற்படுத்த வேண்டும். விழா நாட்களில் யாருக்கும் சிறப்பு முன்னுரிமை தரக்கூடாது என, அறநிலையத்துறை ஆணையர் உத்தரவிட வேண்டும் என மாநில துணைத்தலைவர் சுந்தரவடிவேல் கூறியுள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us