ADDED : ஜூன் 28, 2024 01:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருமங்கலம்: கப்பலுார் தொழிலதிபர்கள் சங்கம், வாசன் கண் மருத்துவமனை, புனித அன்னாள் நல காப்பகம் சார்பில் கண் பரிசோதனை முகாம் நடந்தது.
சங்கத் தலைவர் ரகுநாத ராஜா தொடங்கி வைத்தார். செயற்குழு உறுப்பினர்கள் காமராஜ், பெருமாள் முன்னிலை வகித்தனர். மருத்துவமனை பி.ஆர்.ஓ., தொல்காப்பியன், காப்பகம் ஒருங்கிணைப்பாளர் யோகராஜ் மற்றும் மருத்துவ குழுவினர் பங்கேற்றனர். 600க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டது.