ADDED : ஜூலை 26, 2024 06:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருமங்கலம் : கார்கில் போரில் வெற்றி பெற்ற 25 ஆண்டு விழா திருமங்கலம் ஜெயதுர்கா ராணுவ பயிற்சி பள்ளியில் நடந்தது.
பா.ஜ., ராணுவப் பிரிவு மாநில தலைவர் லெப்ட்டினன் நாயக் ராமன் தலைமையில் போரில் உயிர் நீத்த வீரர்களுக்கு வீர வணக்கம் செலுத்தப்பட்டது. மேற்கு மாவட்ட தலைவர் ஆண்டி முன்னிலை வகித்தார். மாநில துணைத்தலைவர் மாணிக்க நடராஜன், மாநில செயலாளர் ஆனந்தம் ஜெயம், மதுரை கிழக்கு மாவட்ட தலைவர் அசோக் குமார், நிர்வாகிகள் பங்கேற்றனர். அக்னி பாத் திட்டம் குறித்து விளக்கப்பட்டது.