/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
நீதிமன்ற புறக்கணிப்பு இல்லை பா.ஜ., தகவல்
/
நீதிமன்ற புறக்கணிப்பு இல்லை பா.ஜ., தகவல்
ADDED : ஜூன் 30, 2024 05:00 AM
மதுரை, : மதுரையில் பா.ஜ., வழக்கறிஞர் பிரிவு மாநிலத் தலைவர் வணங்காமுடி கூறியதாவது:
நடைமுறையில் உள்ள 3 சட்டங்களை பாரதிய நகரிக் சுரக் ஷா சன்ஹிதா (இந்திய சிவில் பாதுகாப்புச் சட்டம்), பாரதிய நியாய சன்ஹிதா (இந்திய நியாயச் சட்டம்), பாரதிய சாக் ஷிய அதினியம் (இந்திய சாட்சியச் சட்டம்) எனமத்திய அரசு பெயர் மாற்றி உள்ளது. ஜனாதிபதி திரவுபதி முர்மு அதற்கு ஒப்புதல் அளித்தார். இதுகுறித்து மாநில அரசுகள், நீதிமன்றங்கள், போலீசாருக்கு முறையான அறிவிப்புகள் அனுப்பப்பட்டுள்ளன.
சில வழக்கறிஞர் சங்கங்கள் அரசியல் உள் நோக்குடன் அம்மூன்று சட்டங்களை எதிர்த்து ஜூலை 1 முதல் நீதிமன்ற புறக்கணிப்பு நடத்த திட்டமிட்டுள்ளன. அதில் தமிழக பா.ஜ., வழக்கறிஞர் பிரிவு பங்கேற்காது. வழக்கம் போல் நீதிமன்ற பணிகளில் ஈடுபடுவோம். பெயர்களைத் தவிர சட்டங்களில் எவ்வித திருத்தமும் செய்யப்படவில்லை என்றார்.
மாவட்ட வழக்கறிஞர் பிரிவு தலைவர்கள் அய்யப்பராஜா, பிரபாகரன், நவீன், துணைத் தலைவர்கள் ராமராஜ், முருக கணேஷ் உடனிருந்தனர்.