ADDED : ஜூலை 28, 2024 04:59 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பரங்குன்றம், திருநகர் ஜயன்ட்ஸ் குரூப் சார்பில் சீதாலட்சுமி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தமிழ் வழியில் பயிலும் மாணவிகளில் 20 பேருக்கு இலவச சீருடைகள் வழங்கப்பட்டன.
தலைமை ஆசிரியர் நிர்மலா குமாரி தலைமை வகித்தார். கவுன்சிலர் இந்திராகாந்தி வழங்கினார். நிர்வாகிகள் நடராஜன், மரகதசுந்தரம், நாகராஜன், குருசாமி, கிருஷ்ணசாமி, பத்மநாபன் கலந்து கொண்டனர்.