/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
தேர்தலில் மின்கட்டணம் உயர்வு தி.மு.க.,வுக்கு 'ஷாக்' கொடுக்கும் ராஜன்செல்லப்பா கணிப்பு

ADDED : ஜூலை 21, 2024 05:07 AM
திருப்பரங்குன்றம்: 'வரும் சட்டசபை தேர்தலில் தி.மு.க., வீழ்ச்சிக்கு மின் கட்டண உயர்வு முக்கிய காரணமாக அமையும்' என மதுரை அ.தி.மு.க., கிழக்கு மாவட்ட செயலாளர் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ., தெரிவித்தார்.
அவர் கூறியதாவது: தி.மு.க., அரசு மின்கட்டணத்தை மூன்றாவது முறையாக உயர்த்தியுள்ளது. 2026 தேர்தலில் இந்த அரசு வீழ்வதற்கு மின் கட்டண உயர்வு முக்கிய காரணமாக அமையும். தமிழகத்தில் அரசியல் தலைவர்களுக்கு மட்டுமல்ல யாருக்கும் பாதுகாப்பு இல்லாத நிலைதான் நிலவுகிறது. அரசியல் தலைவர்களுக்கு பாதுகாப்பு கொடுக்க இந்த அரசு தவறி விட்டது. ஜூலையில் இதுவரை மதுரையில் மட்டும் 11 கொலைகள் நடந்துள்ளன.
சசிகலா சுற்றுப்பயணத்தை விளையாட்டுத்தனமாக பார்ப்பதா அல்லது வேடிக்கை பார்ப்பதா எனத்தெரியவில்லை. 'சசிகலாவும் நானும் கட்சியில் சேர யாரிடமும் யாசகம் கேட்கவில்லை' என பன்னீர் செல்வம் கூறியுள்ளார். தினகரன் போல் அவர்களும் ஆளுக்கு ஒரு கட்சி நடத்தட்டும். தி.மு.க., கூட்டணியில் இருப்பவர்கள் எப்படி வெளியேறுவது எனத் தெரியாமல் தவிக்கிறார்கள். காங்., கட்சி கூட்டத்தில் கார்த்திக் மிகத்தெளிவாக பேசியிருக்கிறார். அதை கேட்டால் அக்கட்சி நீண்ட நாள் தி.மு.க., கூட்டணியில் இருக்காது. அதற்கான வாய்ப்பு இல்லை என்றார்.
இளைஞரணி செயலர் ரமேஷ், ஒன்றிய செயலாளர் முருகன் உடனிருந்தனர்.