ADDED : ஜூலை 10, 2024 04:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை, : மதுரை மாவட்டத்தில் பொது வினியோக திட்ட சேவைகள் குறித்த மக்கள் குறைதீர் முகாம் ஜூலை 13ல் காலை 10:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை குடிமைப் பொருள் தாசில்தார் மற்றும் வட்ட வழங்கல் அலுவலகங்களில் நடக்கிறது.
இம்முகாமில் ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம், முகவரி மாற்றம், நகல் அட்டை கோருதல், அலைபேசி எண் பதிவு, மாற்றம், அங்கீகாரச் சான்று, தனியார் சந்தையில் விற்கும் பொருட்கள் மற்றும் சேவை குறைபாடுகள் குறித்த மனுக்களை நேரடியாக வழங்கி தீர்வு பெறலாம் என கலெக்டர் சங்கீதா தெரிவித்துள்ளார்.