sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 23, 2025 ,ஐப்பசி 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

அமைச்சரின் மகன் மருத்துவமனையில் அலட்சியம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ.1 லட்சம் இழப்பீடு

/

அமைச்சரின் மகன் மருத்துவமனையில் அலட்சியம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ.1 லட்சம் இழப்பீடு

அமைச்சரின் மகன் மருத்துவமனையில் அலட்சியம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ.1 லட்சம் இழப்பீடு

அமைச்சரின் மகன் மருத்துவமனையில் அலட்சியம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ.1 லட்சம் இழப்பீடு


ADDED : ஜூலை 31, 2024 05:39 AM

Google News

ADDED : ஜூலை 31, 2024 05:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை : சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜி.திவ்யா என்பவர் தாக்கல் செய்த மனு:

சென்னை வேளச்சேரியில் உள்ள, 'ப்ளூம் ஹெல்த்கேர்' மருத்துவமனையில், பிரசவ காலத்தில் ஆலோசனை பெற்றேன். கடந்த 2017 ஜூலை 26ல் இரவு திடீரென பிரசவ வலி ஏற்பட்டதால், அந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன்; மறுநாள் பெண் குழந்தை பிறந்தது. 'வாட்டர் பர்த்' எனும் தண்ணீரில் பிரசவம் என்ற முறை பரிந்துரைக்கப்பட்டது. அந்த முறையில் பிரசவத்துக்கு செல்லும் முன், எனக்கு ரத்தப்போக்கு, வலி ஏற்பட்டது.

பிரசவத்துக்கு பின்னும், உடலில் கடும் வலி ஏற்பட்டது. பிரச்னைக்கு மற்றொரு டாக்டரை அணுகிய போது, பிரசவ அறுவை சிகிச்சைக்கு பின், என் பிறப்புறுப்பின் உள்பகுதியில் வைக்கப்பட்ட பஞ்சு அகற்றப்படவில்லை என்பது தெரியவந்தது. 'டிஸ்சார்ஜ்' அறிக்கையையும், 21 நாட்களுக்கு பிறகே வழங்கினர்.

தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலில் புகார் அளித்தேன். கவுன்சில் மருத்துவ அலட்சியத்துடன் நடந்த டாக்டர்களுக்கு எச்சரிக்கை மட்டுமே விடுத்தது. எனவே, அந்த டாக்டர்கள் மீது இந்திய மருத்துவ கவுன்சில் தொழில் முறை நடத்தை நெறிமுறைகள் மற்றும் ஒழுங்குமுறைகள் சட்டத்தின் கீழ், கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

நீதிபதி ஜெ.நிஷா பானு பிறப்பித்த உத்தரவு: மனுதாரருக்கு சிகிச்சையளித்த டாக்டர்கள், மருத்துவ அலட்சியமாக நடந்து உள்ளனர் என்பதற்கு உறுதியான ஆதாரங்கள் உள்ளன. பிரசவத்துக்கு பின், மனுதாரருக்கு ஏற்பட்ட அசவுகரியத்துக்கு, மற்றொரு டாக்டரை அணுகியுள்ளார். அப்போது தான், பிறப்புறுப்பின் உள்பகுதியில் பஞ்சு இருந்தது தெரியவந்தது.

பிரசவத்துக்கு பின், அவர் அனுபவித்த துன்பம் உண்மையானது. 'வாட்டர் பர்த்' என்ற தண்ணீரில் பிரசவம் என்ற முறை, அறிவியல் ரீதியாக அங்கீகரிக்கப்படவில்லை. அவ்வாறு இருக்கும் போது, அதை மனுதாரரிடம் வலியுறுத்தி, தேவையின்றி துன்புறுத்தி, சிக்கல்களை ஏற்படுத்தியுள்ளனர்; மருத்துவ அலட்சியமாகவும் டாக்டர்கள் செயல்பட்டுள்ளனர்.

இதற்கு இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என, இந்த நீதிமன்றம் கருதுகிறது. எனவே, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு, 'ப்ளூம் ஹெல்த்கேர்' மருத்துவமனையின் டாக்டர் கவிதா கவுதம், 1 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும். இழப்பீடு தொகையை வழங்காவிட்டால், அவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

அமைச்சர் பொன்முடியின் மகன் கவுதம் சிகாமணி, இந்த மருத்துவமனையின் நிர்வாக இயக்குனராக இருக்கிறார்.






      Dinamalar
      Follow us