/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
16 வயது கிரிக்கெட் 'சீரிஸ்' இன்று துவங்குகிறது
/
16 வயது கிரிக்கெட் 'சீரிஸ்' இன்று துவங்குகிறது
ADDED : ஜூன் 14, 2024 05:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை மாவட்ட கிரிக்கெட் சங்க அனுமதியுடன் மதுரை சேது கிரிக்கெட் அகாடமி சார்பில் 16 வயதிற்குட்பட்டோருக்கான மதுரை சிட்டி சேலஞ்சர்ஸ் தொடர் இன்று (ஜூன்14) முதல் 16 வரை மதுரை மாணிக்கம் ராமசாமி கல்லுாரி, சோலைமலை கல்லுாரி மைதானங்களில் நடக்கிறது.
மதுரையில் இருந்து இரு அணிகளும் திண்டுக்கல், தேனி மாவட்டத்தில் தலா ஒரு அணியும் பங்கேற்கின்றன. 50 ஓவர் ஆட்டங்களாக ஒவ்வொரு அணியும் தலா மூன்று அணிகளுடன் மோதும். அணிகள் பெறும் புள்ளிகள் அடிப்படையில் முதலிடத்திற்கு தேர்வு செய்யப்படும்.