/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மீனாட்சி அம்மன் கோயிலில் ஆடி முளைக்கொட்டுத் திருவிழா ஆக.5ல் துவங்குகிறது

ADDED : ஜூன் 29, 2024 04:34 AM
மதுரை, : மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ஆடி முளைகொட்டுத் திருவிழா ஆக.,5 முதல் 14 வரை நடக்கிறது.
'ஆடிப்பட்டம் தேடி விதை' என்ற கூற்றின்படி ஆடி மாதத்தில் விவசாயிகள் விதை விதைத்து நாற்று நட்டு விவசாயப் பணிகளை மேற்கொள்வர். தங்கள் விளை நிலங்களில் அமோக விளைச்சல் வேண்டி முளைக்கட்டு வைத்து கடவுளை வழிபடுவர். விவசாயம் வளம் பெற, நாடு செழிக்க ஆடி முளைக்கொட்டுத் திருவிழா கொண்டாடப்படுவது ஐதீகம்.
அவ்வகையில் மீனாட்சி அம்மன் கோயில் அம்மன் சன்னதி முன் உள்ள கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டு ஆக.,5 முதல் 14 வரை பத்து நாட்கள் திருவிழா நடக்கிறது. இதில் மீனாட்சி அம்மன் பஞ்ச மூர்த்திகளுடன் காலை, மாலை ஆடி வீதியில் சிறப்பு நாதஸ்வர கலைஞர்கள், தவில் வித்வான் இன்னிசையுடன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா வருவார். நாதஸ்வர கலைஞர்கள் கொட்டு மேளம் இசைத்து அம்மனை சேர்த்தி சேர்ப்பர்.
ஆக., 11 ஏழாம் நாள் இரவு திருவீதி உலா முடிந்த பின் உற்ஸவர் சன்னதியில் அம்மன், சுவாமி மாலை மாற்றும் வைபவம் நடக்கிறது.