ADDED : ஜூன் 30, 2024 04:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உசிலம்பட்டி, உசிலம்பட்டி வட்டார வேளாண் துறை சார்பில் எருமார்பட்டி வேளாண் முன்னேற்ற குழுவிற்கான காரீப் விவசாயிகள் பயிற்சி ஊராட்சித் தலைவர் ராணி (பொறுப்பு) முன்னிலையில் நடந்தது. 'அட்மா' திட்ட ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் துவக்கி வைத்தார்.
வேளாண் துணை இயக்குநர் (மாநில திட்டம்) ஐரின்ஆக்னிட்டா, கிருஷ்ணா கல்லுாரி உழவியல் பேராசிரியர் தெய்வசிகாமணி, துணை வேளாண் அலுவலர் புவனேந்திரன், வேளாண் பொறியியல் துறை ஜெகதீசன், உதவி வேளாண் அலுவலர் சங்கரபாண்டியன் பேசினர். திட்ட அலுவலர்கள் ஜோதிலட்சுமி, ராஜேந்திரன், ராஜகோபாலன் ஏற்பாடு செய்திருந்தனர்.