/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
போக்குவரத்து ஓய்வூதியர் சங்க கூட்டம்
/
போக்குவரத்து ஓய்வூதியர் சங்க கூட்டம்
ADDED : ஜூன் 28, 2024 01:13 AM
மதுரை : மதுரை பைபாஸ் ரோடு அரசு போக்குவரத்து ஓய்வூதியர் (எச்.எம்.எஸ்.,) சங்க வளாகத்தில் தீர்மானங்களை நிறைவேற்றும் கூட்டம் நடந்தது. தலைவர் அங்குசாமி தலைமை வகித்தார். பொருளாளர் ஒச்சாத்தேவன், நிர்வாகிகள் கண்ணன், ரவி, பால கிருஷ்ணன், முன்னிலை வகித்தனர்.
தமிழக அரசு, ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு 104 மாத அகவிலைப்படி நிலுவைத்தொகையை இரண்டாக பிரித்து, முதற்கட்டமாக 50 மாத தவணைத் தொகையை உடனே வழங்க வேண்டும். ஓய்வு பெறும் அன்றே அனைத்து பணப்பலன்களும் வழங்க நிதி ஆதாரத்தை உருவாக்க வேண்டும். ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். போக்குவரத்துக் கழகங்களை வாரியமாக மாற்றி 8 மண்டலங்களிலும் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளை உடனடியாக நியமிக்க வேண்டும்.
ஒப்பந்த முறையை கைவிட்டு காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். வாரிசு வேலையை ஊக்குவித்தல், டிரைவர் கண்டக்டர்களை கூடுதல் பணிசெய்ய கட்டாயப்படுத்தும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்தல் உள்ளிட்ட தீர்மானங்களை பொதுச் செயலாளர் ஷாஜகான் விளக்கினார். புதுக்குளம் கிளை நிர்வாகி ராஜேஷ் கண்ணன் நன்றி கூறினார்.