/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
ஆக்கிரமிப்பால் குறுகிய சாலை கண்டுகொள்ளாத அதிகாரிகள் கிராம மக்களுக்கு விடியல் எப்போதோ

ADDED : ஜூன் 03, 2024 03:32 AM

மதுரை: மதுரை கிழக்கு ஒன்றியம் ஆண்டார்கொட்டாரத்தில் இருந்து சீகன்குளம், காத்தவனேந்தல் வழியாக ஒத்தப்பட்டிக்கு ரோடு செல்கிறது.
மூன்று கி.மீ., தொலைவுள்ள இந்த ரோடு வயல்வெளி, வரப்புகளால் ஆக்கிரமிக்கப்பட்டு மிகவும் குறுகலாக உள்ளது. 24 அடி அகலத்தில் துவங்கி வழியெங்கும் குறுகியும், விரிந்தும் பல இடங்களில் 7 அடிஅளவுக்குத்தான் உள்ளது. அநேக இடங்களில் 9 முதல் 10 அடி அகலமே உள்ளது. கார் போன்ற வாகனங்களுக்காக ஒதுங்கினால் ரோட்டின் இருபுறமும் உள்ள 6 அடி பள்ளத்தில் விழ வேண்டியதுதான்.
இதில் தினமும் பள்ளி, கல்லுாரி, அலுவலக பணிகளுக்கு செல்லும் மாணவர்கள், பொதுமக்கள் உயிரை கையில் பிடித்துக் கொண்டே செல்கின்றனர். வாகனங்கள் அடிக்கடி விபத்தை சந்திக்கின்றன. இரவு நேரம் எனில் பயணிப்பதே பெரும் சிரமமாக உள்ளது. பல ஆண்டுகளுக்கு பின்பு, இந்த ரோட்டை சீரமைக்க அரசு பணி ஆணை வழங்கி ஓராண்டுக்கு மேலாகிறது. இருப்பினும் 10 சதவீத பணிகூட முடியவில்லை.
இது தொடர்பாக கிராம மக்கள் தாலுகா, ஒன்றியம், கலெக்டர் அளவில் மனுக்கள் மேல் மனுக்கள் அளித்தும் நடவடிக்கை இல்லை. காத்தவனேந்தலைச் சேர்ந்த சக்திவேல் கூறுகையில், ''பணி ஆணை வழங்கி ஓராண்டாகியும் வேலை நடக்காமல், விடிவு கிடைக்காமல் இருப்பது வேதனை தருகிறது. அனைத்து அதிகாரிகளிடமும் மனு கொடுத்தும் பணி நடக்கவில்லை'' என்றார்.