/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மதுரையில் முதல்வரின் 'ரோடு ஷோ' நிகழ்ச்சியால் 2 நாள் உற்சாகம்: ஆறு தொகுதிகளில் மக்களை கவர 'ஆஹா' ஏற்பாடு

ADDED : மே 27, 2025 01:15 AM

மதுரை: மதுரையில் முதல்வர் ஸ்டாலின் வருகையின்போது மே 31, ஜூன் 1ல் அவரது ரோடு ஷோ நடக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
முதல்வர் தலைமையில் தி.மு.க., பொதுக்குழுக் கூட்டம் ஜூன் 1ல் உத்தங்குடியில் நடக்கிறது. இதற்காக மே 31ல் விமானம் மூலம் மதுரை வரும் முதல்வர், வில்லாபுரம், ஹவுசிங் போர்டு, ஜெய்ஹிந்துபுரம், சோலையழகுபுரம், ஜீவா நகர், சுந்தரராஜபுரம், டி.வி.எஸ்., பாலம், பைபாஸ் ரோடு, பெத்தானியாபுரம் சிக்னல், ஆரப்பாளையம் கிராஸ் ரோடு வழியாக சென்று முன்னாள் மேயர் முத்து வெண்கல சிலையை திறந்து வைக்கிறார்.
முன்னதாக ரோடு ஷோவின் போது ஜெய்ஹிந்துபுரம் வீரமாகாளியம்மன் கோயில் வாசல் முன் அமைச்சர் மூர்த்தி சார்பில் ரூ.50 லட்சத்தில் அமைக்கப்பட்ட நிரந்தர மெகா பந்தலை திறந்து வைக்கிறார். டி.வி.எஸ்., நகர் பாலம் ஜெய்ஹிந்த்புரம் பிரிவு பகுதியை திறந்து வைக்கிறார்.
அன்றிரவு அழகர்கோவில் ரோட்டில் உள்ள தனியார் ஓட்டலில் ஓய்வு எடுக்கிறார். மறுநாள் காலை ஓட்டலில் இருந்து கிளம்பும் போதும் ரோடு ஷோ நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை மாட்டுத்தாவணி ஆர்ச் முதல் பொதுக் குழு நடக்கும் உத்தங்குடி வரை அமைச்சர் மூர்த்தி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் தளபதி, மணிமாறன் ஆகியோர் செய்துள்ளனர். ரோட்டின் இருபுறமும் மக்கள் திரண்டு வரவேற்கின்றனர்.
இரண்டு நாள் ரோடு ஷோ நிகழ்ச்சியிலும் மதுரை தெற்கு, மத்தி, மேற்கு, திருப்பரங்குன்றம், வடக்கு, கிழக்கு என 6 சட்டசபை தொகுதிகளில் உள்ள மக்களை சந்திக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.