/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
பீஹார் போல் தமிழகத்திலும் மதுக்கொள்கை: நல்லசாமி
/
பீஹார் போல் தமிழகத்திலும் மதுக்கொள்கை: நல்லசாமி
ADDED : ஜூன் 15, 2025 07:10 AM
மதுரை : 'பீஹாரை பின்பற்றி தமிழகத்திலும் மதுக்கொள்கையை மாற்றி அமைக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்,' என தமிழக கள் இயக்க கள ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது: தமிழக அரசு மதுவிலக்கு சட்டத்தை பயன்படுத்தி கள் இறக்குவோர் மீது நடவடிக்கை எடுப்பது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது. பீஹாரை பின்பற்றி தமிழகத்திலும் மதுக்கொள்கையை மாற்றி அமைக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.
பீஹாரிலும் கள்ளச் சாராய மரணங்கள் ஏற்பட்டன. ஆனால் அம்மாநில அரசு நிவாரணம் கொடுப்பது தவறான முன்னுதாரணம் ஆகி விடும் என மறுத்து விட்டது. ஆனால் அரசே மதுக்கடைகளை முன்னின்று நடத்தும் தமிழகத்தில், கள்ளச்சாராய சாவிற்கு ரூ.10 லட்சம் வாரி வழங்கும் அவலநிலை உள்ளது.
பீஹார் அரசின் மது விலக்கை முன்னிறுத்தி, டிசம்பரில் மதுவிலக்கு மாநாடு திருச்சியில் நடத்தப்படும். சிறப்பு அழைப்பாளராக பீஹார் முதல்வர்நிதீஷ் குமார் பங்கேற்கிறார். எவ்வித வேறுபாடுமின்றி அனைத்துக் கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்படும்.
இம்மாநாடு 2026 தேர்தல் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் சக்தியாக இருக்கும். இதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றார்.