/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் அதிக காளைகளை அவிழ்க்க ஏற்பாடு; அமைச்சர் மூர்த்தி தகவல்

ADDED : ஜன 12, 2024 06:42 AM

அவனியாபுரம் : ''மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் அதிக காளைகளை அவிழ்த்து விட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன,'' என, அமைச்சர் மூர்த்தி தெரிவித்தார்.
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி ஜன., 15 பொங்கல் அன்று நடக்கிறது. ஜல்லிக்கட்டு ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது.
வாடிவாசல் அமைப்பு உள்ளிட்ட பணிகளை நேற்று அமைச்சர் மூர்த்தி, கலெக்டர் சங்கீதா மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
பின் அமைச்சர் மூர்த்தி கூறியதாவது: இந்த ஆண்டு அதிக காளைகளை அவிழ்த்து விட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பாதுகாப்பிற்காக வழக்கத்தை விட கூடுதலாக போலீசார் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். காளைகளுக்கும், மாடுபிடி வீரர்களுக்கும் எவ்வித பிரச்னையும் ஏற்படாதவாறு முறையாக தடுப்புகள் அமைக்கப்பட உள்ளன என்றார்.