/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
காங்., பிரமுகர் தீக்குளிக்க முயற்சி
/
காங்., பிரமுகர் தீக்குளிக்க முயற்சி
ADDED : மார் 21, 2025 05:35 AM
திருமங்கலம், : திருமங்கலம் தாலுகா அலுவலகத்தில் நில பிரச்னை காரணமாக காங்கிரஸ் பிரமுகர் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சித்தார்.
மதுரை தெற்கு மாவட்ட காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெயக்குமார் 42, இவரது தாத்தா பழனியாண்டிக்கு கிண்ணிமங்கலம் கிராமத்தில் ஒரு ஏக்கர் நிலம் இருந்ததாக கூறப்படுகிறது. அதற்கு பட்டா மாற்றுவதற்கு தாலுகா அலுவலகத்தில் பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லாமல் அலைக்கழிக்கப்பட்டுள்ளார்.
இதனால் நேற்று மாலை தாலுகா அலுவலகத்திற்கு வந்த ஜெயக்குமார் நடவடிக்கை எடுக்குமாறு கூறியுள்ளார். ஆனால் அலுவலகத்தில் இருந்தவர்கள் எந்த பதிலும் கூறாததால் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெயை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தார். நீதிமன்ற வளாகத்தில் இருந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தி தண்ணீரை ஊற்றினர். மேல்விசாரணை நடக்கிறது.