நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : மதுரை தெற்கு சட்டசபை தொகுதிக்குட்பட்ட மாநில, மாவட்ட, மண்டல் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் பூத்கமிட்டி பொறுப்பாளர்கள் பிரதமரின் சாதனைகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பது, அனைத்து பகுதிகளிலும் பூத்கமிட்டி ஆலோசனை கூட்டம் நடத்துவது என்பது உள்ளிட்ட பல தீர்மானங்களை நிறைவேற்றினர்.
தெற்கு சட்டசபை தொகுதி பொறுப்பாளர் துரை பாலமுருகன் ஆலோசனைகளை வழங்கினார். மாவட்ட துணைத் தலைவர்கள் ரோஜாராணி, சிவபாலன், செயலாளர்கள் சுப்பாநாகு, ஜெகதீஷ், கண்ணன், இளைஞரணி நகர் தலைவர் அருண்பாண்டி உட்பட பலர் பங்கேற்றனர்.

