/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
குண்டு வீச்சு வீடியோபோலீஸ் விசாரணை
/
குண்டு வீச்சு வீடியோபோலீஸ் விசாரணை
ADDED : மே 12, 2025 05:52 AM
மதுரை: மதுரை ரவுடி வெள்ளைக்காளி ஆதரவாளர்கள் என்ற பெயரில் குண்டு வீசிய வீடியோ ஒன்று இன்ஸ்டாகிராமில் வைரலாவது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
மதுரையில் மாநகராட்சி முன்னாள் மண்டல தலைவர்கள் குருசாமி - ராஜபாண்டி தரப்புக்கு இடையே 20 ஆண்டுகளுக்கும் மேலாக உள்ளாட்சி தேர்தல் முன்விரோதம் உள்ளது.
இருதரப்பையும் சேர்ந்த உறவினர், நண்பர்கள் என 22க்கும் மேற்பட்டோர் கொலை செய்யப்பட்டுள்ளனர். ராஜபாண்டி தரப்பில் ரவுடி வெள்ளைக்காளி மூலையாக செயல்படுகிறார். அவரை போலீசார் 'என்கவுண்டர்' செய்யப் போவதாக அவரது மனைவி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்நிலையில், 'வெள்ளைக்காளி பசங்கடா நாங்க. விரைவில் ரெட் அலர்ட்' என எச்சரிக்கும் வகையில் பெட்ரோல் குண்டு வீசி அந்த இடத்தில் உள்ள நபர்களை தாக்கும் 'சிசிடிவி' வீடியோ காட்சி இன்ஸ்டாகிராமில் வைரலாகிறது.
இது போலீசாருக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் உள்ளது. இது, எந்த இடத்தில் நடந்த சம்பவம், வெள்ளைக்காளி ஆதரவாளர்கள் தான் வெளியிட்டனரா, என்ன நோக்கத்தில் பகிரப்படுகிறது என்பது தொடர்பாக போலீசார் விசாரிக்கின்றனர்.

