வாடிப்பட்டி: வாடிப்பட்டி வெங்கடாஜலபதி மெட்ரிக் பள்ளியில் மதுரை இளங்கோ முத்தமிழ் மன்றம், கவியரசு கண்ணதாசன் இலக்கிய பேரவை சார்பில் புலவர் சங்கரலிங்கனாரின் ஓமந்துாரார் 100 நுால் வெளியீட்டு விழா நடந்தது.
பேரூராட்சி தலைவர் பால்பாண்டியன் நுாலை வெளியிட்டார். ரெட்டி நல சங்க மாநில பொதுச் செயலாளர் ராஜா பூர்ணசந்திரன் முதல் பிரதியை பெற்றார். புலவர் சங்கரலிங்கம் தொகுத்து வழங்கினார். சர்வோதயா சுந்தர்ராஜன், தி.மு.க., ஒன்றிய செயலாளர் பால ராஜேந்திரன், பேரூராட்சி துணைத் தலைவர் கார்த்திக் முன்னிலை வகித்தனர். ஆசிரியை முருகேஸ்வரி வரவேற்றார்.
டாக்டர் பொன் யாழினி, வழக்கறிஞர் அழகேசன், கவிஞர் கார்த்திகா, முரளி ராமசாமி பேசினர். இலக்கிய பேரவைத் தலைவர் பொன்னையா கவிதை வாசித்தார். ரெட்டி இளைஞரணி மாநில செயலாளர் மணிகண்டன், மாவட்ட செயலாளர் மோனிகா, வி.சி.க., அரசு, தா.மா.க., சரவணன் உட்பட பலர் பங்கேற்றனர். பேரவை பொருளாளர் கண்ணன் நன்றி கூறினார்.

