/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
பார்க்கிங்கில் திடீர் தீ கார்கள் எரிந்து நாசம்
/
பார்க்கிங்கில் திடீர் தீ கார்கள் எரிந்து நாசம்
ADDED : டிச 05, 2025 05:19 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சோழவந்தான்: சோழவந்தானில் அனுமதியின்றி செயல்படும் தனியார் 'பார்க்கிங்கில்' ஏற்பட்ட தீயால் கார்கள் எரிந்தன.
இங்கு துணை மின் நிலையம் எதிரில் சோழவந்தான் தங்கப்பாண்டியன் 71, என்பவரின் தேங்காய் கோடவுன் உள்ளது.
10 ஆண்டுகளுக்கும் மேலாக தனியார் வாகனங்களுக்கு 'பார்க்கிங்'காக செயல்பட்டு வருகிறது. நேற்று அதிகாலை 3:30 மணிக்கு ஏற்பட்ட தீயால் அப்பகுதி பிரபு, கார்த்திகேயனின் 2 கார்கள், குருவித்துறை முத்துக்குமாரின் தள்ளுவண்டி முற்றிலும் எரிந்தன. திருக்குமார், செந்தில்ராஜாவின் 2 கார்கள் சேதமடைந்துள்ளன. காரணம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

