/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
சிட்டி ஸ்போர்ட்ஸ்: எல்.ஐ.சி., டேபிள் டென்னிஸ், பாட்மின்டன்
/
சிட்டி ஸ்போர்ட்ஸ்: எல்.ஐ.சி., டேபிள் டென்னிஸ், பாட்மின்டன்
சிட்டி ஸ்போர்ட்ஸ்: எல்.ஐ.சி., டேபிள் டென்னிஸ், பாட்மின்டன்
சிட்டி ஸ்போர்ட்ஸ்: எல்.ஐ.சி., டேபிள் டென்னிஸ், பாட்மின்டன்
ADDED : ஜூலை 05, 2025 12:52 AM
மதுரை,; மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் நடந்த எல்.ஐ.சி. தென்மண்டல பாட்மின்டன், டேபிள் டென்னிஸ் போட்டியில், தமிழகம், கேரளா, புதுச்சேரி வீரர்கள் பங்கேற்றனர்.
போட்டி முடிவுகள் :
டேபிள் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் சென்னை ராஜேஷ் முதலிடம் பெற்றார். சேலம் நரேஷ்குமார் 2ம் இடம், கேரளாவின் ஆசிஷ் 3ம் இடம், தீபக் ஜோசப் 4ம் இடம் பெற்றனர். மகளிர் ஒற்றையர் பிரிவில் சென்னை கீதா முதலிடம் பெற்றார். சென்னை அனிலா குமரன் 2ம் இடம், கோவை தான்யாதேவி 3ம் இடம், தஞ்சாவூர் கீர்த்திகா 4ம் இடம் பெற்றனர்.
பாட்மின்டன் ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் கேரளாவின் ஜெய்சன் சேவியர் முதலிடம் பெற்றார். தஞ்சாவூர் அருண் ஜெயசீலன் 2ம் இடம், வேலுார் வெற்றிச்செல்வன் 3ம் இடம், கேரளாவின் சுதீஷ் 4ம் இடம் பெற்றனர். மகளிர் ஒற்றையர் பிரிவு போட்டியில் சென்னை தன்னும் பர்வீன் முதலிடம் பெற்றார். தஞ்சாவூர் ரேணுகா 2ம் இடம், வேலுார் ஸ்ரீவித்யா 3ம் இடம், மதுரை ராஜஸ்ரீ 4ம் இடம் பெற்றனர்.
நிறைவு விழாவில் மேலாளர் விஜயலட்சுமி வரவேற்றார். முதுநிலை கோட்ட மேலாளர் நாரயணன் பரிசு வழங்கினார். ஒருங்கிணைப்பு செயலாளர் வேலாயுதம் நன்றி கூறினார்.