/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மகசூல் இழப்பு 33 சதவீதத்துக்கு மேல் இருந்தால் இழப்பீடு
/
மகசூல் இழப்பு 33 சதவீதத்துக்கு மேல் இருந்தால் இழப்பீடு
மகசூல் இழப்பு 33 சதவீதத்துக்கு மேல் இருந்தால் இழப்பீடு
மகசூல் இழப்பு 33 சதவீதத்துக்கு மேல் இருந்தால் இழப்பீடு
ADDED : ஜன 10, 2024 12:50 AM
மதுரை : ''மழையால் ஏற்பட்ட மகசூல் இழப்பு 33 சதவீதத்திற்கு மேல் இருந்தால் இழப்பீடு வழங்கப்படும்'' என வேளாண் துறை இணை இயக்குநர் சுப்புராஜ் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது: சேடப்பட்டியில் ஜன.,4, செல்லம்பட்டி, திருமங்கலத்தில் ஜன.,6 மற்றும் டி.கல்லுபட்டியில் பெய்த கனமழையால் நெற்பயிர்கள் கதிர் பிடித்த நிலையில் தலைசாய்ந்தன. சேடப்பட்டியில் 334 எக்டேர், டி.கல்லுப்பட்டியில் 96, செல்லம்பட்டியில் 913, திருமங்கலத்தில் 18 எக்டேர் பரப்பிலான, இருவாரங்களில் அறுவடை நடக்க உள்ள நிலையில் பயிர்கள் சேதமடைந்துள்ளன.
இவற்றை ஆய்வு செய்து கலெக்டர் மூலம் சென்னைக்கு அறிக்கையாக அனுப்பியுள்ளோம். 1361 எக்டேர் நெற்பயிரும் 3 எக்டேர் மக்காச்சோள பயிரும் பாதிக்கப்பட்டுள்ளது. விவசாயிகளின் வயல்களில் மொத்த அறுவடையில் 33 சதவீதத்திற்கு மேல் மகசூல் இழப்பு இருந்தால் மாநில பேரிடர் நிவாரண நிதியின் கீழ் இழப்பீடு வழங்கப்படும் என்றார்.