ADDED : செப் 15, 2025 03:56 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் பூங்கா பஸ் ஸ்டாப் அருகே பாலாஜிநகர் செல்லும் இணைப்பு சாலை சேதமடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது.
பாலாஜி நகரில் இருந்து திருப்பரங்குன்றம், திருநகர், மதுரைக்கு செல்வோர் பூங்கா பஸ்ஸ்டாப் அருகே செட்டிக்குளம் ஊரணியை ஒட்டியுள்ள ரோட்டை பயன்படுத்துகின்றனர். அந்த ரோடும், மெயின் ரோடும் இணையும் இடத்தில் குண்டும் குழியுமாக ஜல்லிக் கற்கள் பரவிக் கிடக்கிறது. இரவு நேரங்களில் டூவீலர்களில் செல்வோர் அந்த ரோட்டில் மேடு பள்ளங்களில் விழுந்து காயமடைகின்றனர். சீரமைக்க நடவடிக்கை தேவை.