ADDED : மே 30, 2025 04:02 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பரங்குன்றம்: மதுரை ஹார்விபட்டி எஸ்.ஆர்.வி. நகர் குடியிருப்பு பகுதியில் நேற்று மாலையில் புள்ளிமான் வந்தது. மானை பார்த்ததும் அப்பகுதி மக்கள் சத்தமிட்டனர்.
அந்தமான் ஓடி முட்புதரில் சிக்கியது. அப்பகுதியினர் பாம்பு பிடி வீரர் பாபுவிற்கு தகவல் தெரிவித்தனர். அவர் வந்து மானை மீட்டார். மானின் வாய் மற்றும் காலில் காயம் ஏற்பட்டது. வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வனத்துறை அலுவலர் விவேகானந்தன், ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு வந்தனர். அவர்களிடம் மான் ஒப்படைக்கப்பட்டது.
மானுக்கு சிகிச்சை அளித்து வனப்பகுதியில் விடுவதாக அவர்கள் தெரிவித்து சென்றனர்.