/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
ஜூன் 1 மதுரையில் தி.மு.க., பொதுக்குழு அறிவாலயம் மாடலில் பிரமாண்ட அரங்கு முதல்வர் ஸ்டாலின் ரோடு ஷோவிற்கு ஏற்பாடு

ADDED : மே 23, 2025 12:25 AM
மதுரை:மதுரையில் தி.மு.க., பொதுக்குழுக் கூட்டம் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஜூன் 1ல் நடக்கிறது. இதற்காக அமைச்சர் மூர்த்தி தலைமையில் உத்தங்குடியில் 'அறிவாலயம்' மாடலில் பிரமாண்ட அரங்கு அமைக்கும் பணிகள் நடக்கிறது.
சென்னையில் நடந்த தி.மு.க., மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில், பொதுக் குழுக் கூட்டம் மதுரையில் நடக்கும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.
இதையடுத்து உத்தங்குடியில் 90 ஏக்கர் இடத்தில் கூட்டம் நடத்துவதற்கான ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளது. 10 ஆயிரம் பேர் அமரும் வகையில் குளிரூட்டப்பட்ட அரங்கு, 3500 பேர் ஒரே நேரத்தில் சாப்பிடும் வகையில் குளிரூட்டப்பட்ட உணவுக் கூடம், முதல்வர், அமைச்சர்கள், பொதுக் குழு உறுப்பினர்களுக்கு தனித்தனியே செல்லும் நுழைவு வாயில்கள் அமைத்தல், வாகனங்கள் வசதி உள்ளிட்டவை செய்யப்பட்டு வருகின்றன.
இதுதவிர 100 அடி உயரத்தில் பிரமாண்ட கட்சிக் கொடி, செயற்கை நீர்வீழ்ச்சி உள்ளிட்டவை அமைக்கப்பட்டு வருகின்றன. இதற்கான பணிகள் அமைச்சர் மூர்த்தி தலைமையில் நடக்கிறது. மாவட்ட செயலாளர்கள் தளபதி, மணிமாறன் இணைந்து பணியாற்றுகின்றனர்.
முதல்வர் ரோடு ஷோ
பொதுக் குழுவில் பங்கேற்க முதல்நாளே (மே 31) முதல்வர் ஸ்டாலின் மதுரை வருகிறார். மதுரை மேற்கு, மத்தி, வடக்கு தொகுதிகளில் ரோடு ஷோவில் பங்கேற்கிறார். முன்னாள் மேயர் முத்து சிலை திறப்பு விழா, மூக்கையா தேவர் மணிமண்டபம் துவக்க விழா நிகழ்ச்சிகளிலும் ஸ்டாலின் பங்கேற்கிறார்.