நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேலுார் : மேலுாரில் அனைத்து துறை ஓய்வூதியர்கள் நலச்சங்க செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடந்தது.
நிர்வாகி வீரணன் தலைமையில் நடந்த தேர்தலில் தலைவராக ஜெயராஜூ, செயலாளராக தமிழையா, பொருளாளராக ஆதிசிவன், செயல் தலைவராக மணி, துணைத்தலைவராக சிதம்பரம் மற்றும் நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
பஹல்காமில் பயங்கரவாதிகளால் சுட்டு கொல்லப்பட்டவர்களுக்கு மவுன அஞ்சலி செலுத்தினர். ஓய்வூதியர்களுக்கு தேர்தலின் போது அறிவித்த ஊதிய உயர்வை உயர்த்த வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றினர்.

